Unave marunthu

கிராம்பின் மருத்துவ பயன்கள், Unave marunthu,Madurai Local Directory

கிராம்பின் மருத்துவ பயன்கள்

மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு

சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
100 கிராம் கிராம்பில் 274 கலோரிகள் 13 கிராம் கொழுப்பு 277 மி. கி சோடியம் 1,020 மி. கி பொட்டாசியம் 66 கிராம் கார்போஹைட்ரேட் 6 கிராம் புரதம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் 3% வைட்டமின் ஏ 0.63 கால்சியம் 65% இரும்பு 20% வைட்டமின் பி -6 64% மெக்னீசியம் உள்ளன.
பல்வலி போக்கும் உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

விந்து முந்துதல் தடுக்க கிராம்பு எண்ணெய்

விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க கிராம்பு எண்ணெய்யை ஆண்கள் உடலுறுவிற்கு முன்பு தடவலாம். இது பயனைத் தரும். உடலுறவுக்கு முன்னால் கிராம்பு எண்ணெயை ஆண்கள் தங்களுடைய பிறப்புறுப்பில் தடவி வருவது நிறைய நன்மைகளைத் தரும். குறிப்பாக, விந்து முந்துதல், விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்ய நல்ல தீர்வாக இந்த கிராம்பு எண்ணெய் அமையும். விறைப்புத் தன்மைக் கோளாறு பிரச்சினைக்கும் இந்த கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வைத் தரும்.

ஆஸ்துமா தடுக்க கிராம்பு எண்ணெய்

ஆஸ்துமா கட்டுப்படும் கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு

கிராம்பில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இது மெட்டா பாலிக் வேலையை அதிகரித்து கல்லீரலில் கொழுப்புகள் தங்குவதை அதிகரிக்கிறது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கிறது. இதனால் டயாபெட்டீஸ் நோயாளிகள் கிராம் பை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Hits: 903, Rating : ( 5 ) by 1 User(s).